1. பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
1. And it came to pass after this that David inquired of the LORD, saying, 'Shall I go up into any of the cities of Judah?' And the LORD said unto him, 'Go up.' And David said, 'Whither shall I go up?' And He said, 'Unto Hebron.'