1. உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணவந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக்கூடாமற்போயிற்று.
1. When King Ahaz, the son of Jotham and grandson of Uzziah, ruled Judah, war broke out. Rezin, king of Syria, and Pekah son of Remaliah, king of Israel, attacked Jerusalem, but were unable to capture it.