Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
1. As governor, I signed the agreement together with Zedekiah and the following priests:
2. செராயா, அசரியா, எரேமியா,
2. Seraiah, Azariah, Jeremiah, Pashhur, Amariah, Malchijah, Hattush, Shebaniah, Malluch, Harim, Meremoth, Obadiah, Daniel, Ginnethon, Baruch, Meshullam, Abijah, Mijamin, Maaziah, Bilgai, and Shemaiah.
3. பஸ்கூர், அமரியா, மல்கிஜா,
3. (SEE 10:2)
4. அத்தூஸ், செபனியா, மல்லூக்,
4. (SEE 10:2)
5. ஆரீம், மெரெமோத், ஒபதியா,
5. (SEE 10:2)
6. தானியேல், கிநேதோன், பாருக்,
6. (SEE 10:2)
7. மெசுல்லாம், அபியா, மீயாமின்,
7. (SEE 10:2)
8. மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
8. (SEE 10:2)
9. லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
9. The Levites who signed were: Jeshua son of Azaniah, Binnui from the clan of Henadad, Kadmiel,
10. அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
10. Shebaniah, Hodiah, Kelita, Pelaiah, Hanan,
11. மீகா, ரேகோப், அசபியா,
11. Mica, Rehob, Hashabiah,
12. சக்கூர், செரெபியா, செபனியா,
12. Zaccur, Sherebiah, Shebaniah,
13. ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
13. Hodiah, Bani, and Beninu.
14. ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
14. The leaders who signed were: Parosh, Pahath Moab, Elam, Zattu, Bani,
15. புன்னி, அஸ்காத், பெபாயி,
15. Bunni, Azgad, Bebai,
16. அதோனியா, பிக்வாய், ஆதின்,
16. Adonijah, Bigvai, Adin,
17. ஆதேர், இஸ்கியா, அசூர்,
17. Ater, Hezekiah, Azzur,
18. ஒதியா, ஆசூம், பெத்சாய்,
18. Hodiah, Hashum, Bezai,
19. ஆரீப், ஆனதோத், நெபாய்,
19. Hariph, Anathoth, Nebai,
20. மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
20. Magpiash, Meshullam, Hezir,
21. மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
21. Meshezabel, Zadok, Jaddua,
22. பெலத்தியா, ஆனான், ஆனாயா,
22. Pelatiah, Hanan, Anaiah,
23. ஓசெயா, அனனியா, அசூப்,
23. Hoshea, Hananiah, Hasshub,
24. அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
24. Hallohesh, Pilha, Shobek,
25. ரேகூம், அஷபனா, மாசெயா,
25. Rehum, Hashabnah, Maaseiah,
26. அகியா, கானான், ஆனான்,
26. Ahiah, Hanan, Anan,
27. மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
27. Malluch, Harim, and Baanah.
28. ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,
28. All of us, including priests, Levites, temple guards, singers, temple workers and leaders, together with our wives and children, have separated ourselves from the foreigners in this land and now enter into an agreement with a complete understanding of what we are doing. And so, we now place ourselves under the curse of the LORD our God, if we fail to obey his laws and teachings that were given to us by his servant Moses.
29. தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
29. (SEE 10:28)
30. நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக்கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
30. We won't let our sons and daughters marry foreigners.
31. தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
31. We won't buy goods or grain on the Sabbath or on any other sacred day, not even from foreigners. Every seven years we will let our fields rest, and we will cancel all debts.
32. மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
32. Once a year we will each donate a small amount of silver to the temple of our God.
33. எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
33. This is to pay for the sacred bread, as well as for the daily sacrifices and special sacrifices such as those offered on the Sabbath and during the New Moon Festival and the other festivals. It will also pay for the sacrifices to forgive our sins and for all expenses connected with the worship of God in the temple.
34. நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும். லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
34. We have decided that the families of priests, Levites, and ordinary people will supply firewood for the temple each year, so that sacrifices can be offered on the altar, just as the LORD our God has commanded.
35. நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
35. Each year we will bring to the temple the first part of our harvest of grain and fruit.
36. நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,
36. We will bring our first-born sons and the first-born males of our herds and flocks and offer them to the priests who serve in the temple, because this is what is written in God's Law.
37. நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்துக்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,ரோமர் 11:16
37. To the priests in the temple of our God, we will bring the bread dough from the first harvest, together with our best fruit, and an offering of new wine and olive oil. We will bring ten percent of our grain harvest to those Levites who are responsible for collecting it in our towns.
38. லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
38. A priest from the family of Aaron must be there when we give this to the Levites. Then the Levites will put one tenth of this part in the temple storeroom,
39. பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும், வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.
39. which is also the place for the sacred objects used by the priests, the temple guards, and the singers. Levites and everyone else must bring their gifts of grain, wine, and olive oil to this room. We will not neglect the temple of our God.