1 Samuel - 1 சாமுவேல் 6 | View All

1. கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.

1. The ark of the LORD was in the country of the Philistines seven months.

2. பின்பு பெலிஸ்தர் பூஜாசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.

2. And the Philistines called for the priests and the diviners and said, 'What shall we do with the ark of the LORD? Tell us with what we shall send it to its place.'

3. அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதும் அல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.

3. They said, 'If you send away the ark of the God of Israel, do not send it empty, but by all means return him a guilt offering. Then you will be healed, and it will be known to you why his hand does not turn away from you.'

4. அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

4. And they said, 'What is the guilt offering that we shall return to him?' They answered, 'Five golden tumors and five golden mice, according to the number of the lords of the Philistines; for the same plague was upon all of you and upon your lords.

5. ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.

5. So you must make images of your tumors and images of your mice that ravage the land, and give glory to the God of Israel; perhaps he will lighten his hand from off you and your gods and your land.

6. எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?

6. Why should you harden your hearts as the Egyptians and Pharaoh hardened their hearts? After he had made sport of them, did not they let the people go, and they departed?

7. இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,

7. Now then, take and prepare a new cart and two milch cows upon which there has never come a yoke, and yoke the cows to the cart, but take their calves home, away from them.

8. பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.

8. And take the ark of the LORD and place it on the cart, and put in a box at its side the figures of gold, which you are returning to him as a guilt offering. Then send it off, and let it go its way.

9. அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.

9. And watch; if it goes up on the way to its own land, to Bethshemesh, then it is he who has done us this great harm; but if not, then we shall know that it is not his hand that struck us, it happened to us by chance.'

10. அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,

10. The men did so, and took two milch cows and yoked them to the cart, and shut up their calves at home.

11. கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.

11. And they put the ark of the LORD on the cart, and the box with the golden mice and the images of their tumors.

12. அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.

12. And the cows went straight in the direction of Bethshemesh along one highway, lowing as they went; they turned neither to the right nor to the left, and the lords of the Philistines went after them as far as the border of Bethshemesh.

13. பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.

13. Now the people of Bethshemesh were reaping their wheat harvest in the valley; and when they lifted up their eyes and saw the ark, they rejoiced to see it.

14. அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.

14. The cart came into the field of Joshua of Bethshemesh, and stopped there. A great stone was there; and they split up the wood of the cart and offered the cows as a burnt offering to the LORD.

15. லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.

15. And the Levites took down the ark of the LORD and the box that was beside it, in which were the golden figures, and set them upon the great stone; and the men of Bethshemesh offered burnt offerings and sacrificed sacrifices on that day to the LORD.

16. பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.

16. And when the five lords of the Philistines saw it, they returned that day to Ekron.

17. பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.

17. These are the golden tumors, which the Philistines returned as a guilt offering to the LORD: one for Ashdod, one for Gaza, one for Ashkelon, one for Gath, one for Ekron;

18. பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள் மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.

18. also the golden mice, according to the number of all the cities of the Philistines belonging to the five lords, both fortified cities and unwalled villages. The great stone, beside which they set down the ark of the LORD, is a witness to this day in the field of Joshua of Bethshemesh.

19. ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

19. And he slew some of the men of Bethshemesh, because they looked into the ark of the LORD; he slew seventy men of them, and the people mourned because the LORD had made a great slaughter among the people.

20. இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,

20. Then the men of Bethshemesh said, 'Who is able to stand before the LORD, this holy God? And to whom shall he go up away from us?'

21. கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.

21. So they sent messengers to the inhabitants of Kiriathjearim, saying, 'The Philistines have returned the ark of the LORD. Come down and take it up to you.'



Shortcut Links
1 சாமுவேல் - 1 Samuel : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
ஆதியாகமம் - Genesis | யாத்திராகமம் - Exodus | லேவியராகமம் - Leviticus | எண்ணாகமம் - Numbers | உபாகமம் - Deuteronomy | யோசுவா - Joshua | நியாயாதிபதிகள் - Judges | ரூத் - Ruth | 1 சாமுவேல் - 1 Samuel | 2 சாமுவேல் - 2 Samuel | 1 இராஜாக்கள் - 1 Kings | 2 இராஜாக்கள் - 2 Kings | 1 நாளாகமம் - 1 Chronicles | 2 நாளாகமம் - 2 Chronicles | எஸ்றா - Ezra | நெகேமியா - Nehemiah | எஸ்தர் - Esther | யோபு - Job | சங்கீதம் - Psalms | நீதிமொழிகள் - Proverbs | பிரசங்கி - Ecclesiastes | உன்னதப்பாட்டு - Song of Songs | ஏசாயா - Isaiah | எரேமியா - Jeremiah | புலம்பல் - Lamentations | எசேக்கியேல் - Ezekiel | தானியேல் - Daniel | ஓசியா - Hosea | யோவேல் - Joel | ஆமோஸ் - Amos | ஒபதியா - Obadiah | யோனா - Jonah | மீகா - Micah | நாகூம் - Nahum | ஆபகூக் - Habakkuk | செப்பனியா - Zephaniah | ஆகாய் - Haggai | சகரியா - Zechariah | மல்கியா - Malachi | மத்தேயு - Matthew | மாற்கு - Mark | லூக்கா - Luke | யோவான் - John | அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts | ரோமர் - Romans | 1 கொரிந்தியர் - 1 Corinthians | 2 கொரிந்தியர் - 2 Corinthians | கலாத்தியர் - Galatians | எபேசியர் - Ephesians | பிலிப்பியர் - Philippians | கொலோசெயர் - Colossians | 1 தெசலோனிக்கேயர் - 1 Thessalonians | 2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians | 1 தீமோத்தேயு - 1 Timothy | 2 தீமோத்தேயு - 2 Timothy | தீத்து - Titus | பிலேமோன் - Philemon | எபிரேயர் - Hebrews | யாக்கோபு - James | 1 பேதுரு - 1 Peter | 2 பேதுரு - 2 Peter | 1 யோவான் - 1 John | 2 யோவான் - 2 John | 3 யோவான் - 3 John | யூதா - Jude | வெளிப்படுத்தின விசேஷம் - Revelation |

Explore Parallel Bibles
21st Century KJV | A Conservative Version | American King James Version (1999) | American Standard Version (1901) | Amplified Bible (1965) | Apostles' Bible Complete (2004) | Bengali Bible | Bible in Basic English (1964) | Bishop's Bible | Complementary English Version (1995) | Coverdale Bible (1535) | Easy to Read Revised Version (2005) | English Jubilee 2000 Bible (2000) | English Lo Parishuddha Grandham | English Standard Version (2001) | Geneva Bible (1599) | Hebrew Names Version | tamil Bible | Holman Christian Standard Bible (2004) | Holy Bible Revised Version (1885) | Kannada Bible | King James Version (1769) | Literal Translation of Holy Bible (2000) | Malayalam Bible | Modern King James Version (1962) | New American Bible | New American Standard Bible (1995) | New Century Version (1991) | New English Translation (2005) | New International Reader's Version (1998) | New International Version (1984) (US) | New International Version (UK) | New King James Version (1982) | New Life Version (1969) | New Living Translation (1996) | New Revised Standard Version (1989) | Restored Name KJV | Revised Standard Version (1952) | Revised Version (1881-1885) | Revised Webster Update (1995) | Rotherhams Emphasized Bible (1902) | Tamil Bible | Telugu Bible (BSI) | Telugu Bible (WBTC) | The Complete Jewish Bible (1998) | The Darby Bible (1890) | The Douay-Rheims American Bible (1899) | The Message Bible (2002) | The New Jerusalem Bible | The Webster Bible (1833) | Third Millennium Bible (1998) | Today's English Version (Good News Bible) (1992) | Today's New International Version (2005) | Tyndale Bible (1534) | Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537) | Updated Bible (2006) | Voice In Wilderness (2006) | World English Bible | Wycliffe Bible (1395) | Young's Literal Translation (1898) | Tamil Bible Commentary |