Joshua - யோசுவா 19 | View All

1. இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

1. The second lot came out for Shim'on, for the tribe of the descendants of Shim'on according to their families. Their inheritance was inside the inheritance of the descendants of Y'hudah.

2. அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,

2. For their inheritance they had Be'er-Sheva, Sheva, Moladah,

3. ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,

3. Hatzar-Shu'al, Balah, 'Etzem,

4. எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,

4. El-Tolad, B'tul, Hormah,

5. சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,

5. Ziklag, Beit-Markavot, Hatzar-Susah,

6. பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.

6. Beit-L'va'ot and Sharuchen- thirteen cities, together with their villages;

7. மேலும் ஆயின், ரிம்மோன். எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

7. 'Ayin, Rimmon, 'Eter and 'Ashan- four cities, together with their villages;

8. இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

8. and all the villages surrounding these cities, as far as Ba'alat-Be'er, Ramah of the Negev. This is the inheritance of the tribe of the descendants of Shim'on according to their families.

9. சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

9. The inheritance of the descendants of Shim'on was taken out of the allotment for the descendants of Y'hudah, because the portion given to the descendants of Y'hudah was too much for them, so the descendants of Shim'on had an inheritance inside the descendants of Y'hudah.

10. மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.

10. The third lot came up for the descendants of Z'vulun according to their families. The border of their inheritance began at Sarid.

11. அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.

11. Then their border went up westward to Mar'alah, extended to Dabeshet and on to the [vadi] fronting Yokne'am.

12. சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

12. Also from Sarid it turned toward the sunrise to the east to the border of Kislot-Tavor, went on to Dovrat and up to Yafia.

13. அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.

13. From there it passed eastward to Gat-Hefer, on to 'Et-Katzin, went out at Rimmon and reached to Ne'ah.

14. அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.

14. Then the border turned on the north side to Hanaton, ending in the Yiftach'el Valley.

15. காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

15. Also Katat, Nahalal, Shimron, Yid'alah and Beit-Lechem- twelve cities, together with their villages.

16. செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

16. This is the inheritance of the descendants of Z'vulun according to their families, these cities with their villages.

17. நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

17. The fourth lot came out for Yissakhar, for the descendants of Yissakhar according to their families.

18. இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,

18. Their territory included Yizre'el, K'sulot, Shunem,

19. அப்பிராயீம், சீகோன் அனாகராத்,

19. Hafarayim, Shi'on, Anacharat,

20. ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,

20. Rabit, Kishyon, Evetz,

21. ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.

21. Remet, 'Ein-Ganim, 'Ein-Hadah and Beit-Patzetz.

22. அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.

22. Their territory extended to Tavor, Shachatzimah and Beit-Shemesh; and their territory ended at the Yarden- sixteen cities, together with their villages.

23. இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

23. This is the inheritance of the tribe of the descendants of Yissakhar according to their families, the cities, with their villages.

24. ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.

24. The fifth lot came out for the tribe of the descendants of Asher according to their families.

25. அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,

25. Their territory included Helkat, Hali, Beten, Akhshaf,

26. அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,

26. Alamelekh, 'Am'ad and Mish'al. It extended to the Karmel on the west and to Shichor-Livnat.

27. கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,

27. The border turned eastward to Beit-Dagon, reached to Z'vulun and the Yiftach'el Valley on its north, then Beit-'Emek and Ne'i'el, went out to Kavul on the left,

28. எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போகும்.

28. then 'Evron, Rechov, Hamon, Kanah and on to greater Tzidon.

29. அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம் மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.

29. The border turned toward Ramah and the fortified city of Tzor; next the border turned to Hosah; and it ended at the sea from Hevel to Akhziv.

30. உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

30. Also included were 'Umah, Afek and Rechov- twenty cities, together with their villages.

31. இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

31. This is the inheritance of the tribe of the descendants of Asher according to their families, these cities with their villages.

32. ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.

32. The sixth lot came out for the descendants of Naftali, for the descendants of Naftali according to their families.

33. நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம் மட்டும் போய், யோர்தானில் முடியும்.

33. Their border went from Helef and the oak in Tza'ananim, included Adami-Nekev and Yavne'el, went on to Lakum and ended at the Yarden.

34. அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.

34. Westward the border turned to Aznot-Tavor and went out from there to Hukok, reaching to Z'vulun on the south, Asher on the west and Y'hudah at the Yarden toward the east.

35. அரணிப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,

35. The fortified cities were Tzidim, Tzer, Hamat, Rakat, Kinneret,

36. ஆதமா, ராமா, ஆத்சோர்,

36. Adamah, Ramah, Hatzor,

37. கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,

37. Kedesh, Edre'i, 'Ein-Hatzor,

38. ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.

38. Yir'on, Migdal-El, Horem, Beit-'Anat and Beit-Shemesh- nineteen cities, together with their villages.

39. இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.

39. This is the inheritance of the tribe of the descendants of Naftali according to their families, the cities with their villages.

40. ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.

40. The seventh lot came out for the tribe of the descendants of Dan according to their families.

41. அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

41. The territory of their inheritance included Tzor'ah, Eshta'ol, 'Ir-Shemesh,

42. சாலாபீன், ஆயலோன், யெத்லா,

42. Sha'alabin, Ayalon, Yitlah,

43. ஏலோன், திம்னாதா, எக்ரோன்,

43. Eilon, Timnah, 'Ekron,

44. எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,

44. Elt'keh, Gib'ton, Ba'alat,

45. யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,

45. Y'hud, B'nei-Brak, Gat-Rimmon,

46. மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.

46. Yarkon Springs and Rakon, with the border fronting Yafo.

47. தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி. அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.

47. The territory of the descendants of Dan was too small for them, so the descendants of Dan went up and fought against Leshem, captured it, defeated it by the sword, took possession of it and lived there, calling Leshem 'Dan' after Dan their ancestor.

48. இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

48. This is the inheritance of the tribe of the descendants of Dan according to their families, these cities with their villages.

49. தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.

49. When they had finished distributing the land for inheritance according to its borders, the people of Isra'el gave an inheritance within their territory to Y'hoshua the son of Nun.

50. எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.

50. According to ADONAI's order they gave him the city he had asked for, Timnat-Serach in the hills of Efrayim; so he built up the city and lived in it.

51. ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

51. These are the inheritances which El'azar the [cohen], Y'hoshua the son of Nun and the leaders of the ancestral clans of the tribes of the people of Isra'el distributed for inheritance by lot in Shiloh before ADONAI at the door of the tent of meeting. Thus they finished dividing up the land.



Shortcut Links
யோசுவா - Joshua : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
ஆதியாகமம் - Genesis | யாத்திராகமம் - Exodus | லேவியராகமம் - Leviticus | எண்ணாகமம் - Numbers | உபாகமம் - Deuteronomy | யோசுவா - Joshua | நியாயாதிபதிகள் - Judges | ரூத் - Ruth | 1 சாமுவேல் - 1 Samuel | 2 சாமுவேல் - 2 Samuel | 1 இராஜாக்கள் - 1 Kings | 2 இராஜாக்கள் - 2 Kings | 1 நாளாகமம் - 1 Chronicles | 2 நாளாகமம் - 2 Chronicles | எஸ்றா - Ezra | நெகேமியா - Nehemiah | எஸ்தர் - Esther | யோபு - Job | சங்கீதம் - Psalms | நீதிமொழிகள் - Proverbs | பிரசங்கி - Ecclesiastes | உன்னதப்பாட்டு - Song of Songs | ஏசாயா - Isaiah | எரேமியா - Jeremiah | புலம்பல் - Lamentations | எசேக்கியேல் - Ezekiel | தானியேல் - Daniel | ஓசியா - Hosea | யோவேல் - Joel | ஆமோஸ் - Amos | ஒபதியா - Obadiah | யோனா - Jonah | மீகா - Micah | நாகூம் - Nahum | ஆபகூக் - Habakkuk | செப்பனியா - Zephaniah | ஆகாய் - Haggai | சகரியா - Zechariah | மல்கியா - Malachi | மத்தேயு - Matthew | மாற்கு - Mark | லூக்கா - Luke | யோவான் - John | அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts | ரோமர் - Romans | 1 கொரிந்தியர் - 1 Corinthians | 2 கொரிந்தியர் - 2 Corinthians | கலாத்தியர் - Galatians | எபேசியர் - Ephesians | பிலிப்பியர் - Philippians | கொலோசெயர் - Colossians | 1 தெசலோனிக்கேயர் - 1 Thessalonians | 2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians | 1 தீமோத்தேயு - 1 Timothy | 2 தீமோத்தேயு - 2 Timothy | தீத்து - Titus | பிலேமோன் - Philemon | எபிரேயர் - Hebrews | யாக்கோபு - James | 1 பேதுரு - 1 Peter | 2 பேதுரு - 2 Peter | 1 யோவான் - 1 John | 2 யோவான் - 2 John | 3 யோவான் - 3 John | யூதா - Jude | வெளிப்படுத்தின விசேஷம் - Revelation |

Explore Parallel Bibles
21st Century KJV | A Conservative Version | American King James Version (1999) | American Standard Version (1901) | Amplified Bible (1965) | Apostles' Bible Complete (2004) | Bengali Bible | Bible in Basic English (1964) | Bishop's Bible | Complementary English Version (1995) | Coverdale Bible (1535) | Easy to Read Revised Version (2005) | English Jubilee 2000 Bible (2000) | English Lo Parishuddha Grandham | English Standard Version (2001) | Geneva Bible (1599) | Hebrew Names Version | tamil Bible | Holman Christian Standard Bible (2004) | Holy Bible Revised Version (1885) | Kannada Bible | King James Version (1769) | Literal Translation of Holy Bible (2000) | Malayalam Bible | Modern King James Version (1962) | New American Bible | New American Standard Bible (1995) | New Century Version (1991) | New English Translation (2005) | New International Reader's Version (1998) | New International Version (1984) (US) | New International Version (UK) | New King James Version (1982) | New Life Version (1969) | New Living Translation (1996) | New Revised Standard Version (1989) | Restored Name KJV | Revised Standard Version (1952) | Revised Version (1881-1885) | Revised Webster Update (1995) | Rotherhams Emphasized Bible (1902) | Tamil Bible | Telugu Bible (BSI) | Telugu Bible (WBTC) | The Complete Jewish Bible (1998) | The Darby Bible (1890) | The Douay-Rheims American Bible (1899) | The Message Bible (2002) | The New Jerusalem Bible | The Webster Bible (1833) | Third Millennium Bible (1998) | Today's English Version (Good News Bible) (1992) | Today's New International Version (2005) | Tyndale Bible (1534) | Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537) | Updated Bible (2006) | Voice In Wilderness (2006) | World English Bible | Wycliffe Bible (1395) | Young's Literal Translation (1898) | Tamil Bible Commentary |