Acts - அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 | View All

1. பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.

1. Then the high priest said: Are these things so?

2. அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
சங்கீதம் 29:3

2. Who said: Ye men, brethren, and fathers, hear. The God of glory appeared to our father Abraham, when he was in Mesopotamia, before he dwelt in Charan.

3. நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.
ஆதியாகமம் 12:1, ஆதியாகமம் 48:4

3. And said to him: Go forth out of thy country, and from thy kindred, and come into the land which I shall shew thee.

4. அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
ஆதியாகமம் 12:5

4. Then he went out of the land of the Chaldeans, and dwelt in Charan. And from thence, after his father was dead, he removed him into this land, wherein you now dwell.

5. இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
ஆதியாகமம் 13:15, ஆதியாகமம் 15:18, ஆதியாகமம் 16:1, ஆதியாகமம் 17:8, ஆதியாகமம் 48:4, ஆதியாகமம் 24:7, உபாகமம் 2:5, உபாகமம் 11:5, உபாகமம் 32:49

5. And he gave him no inheritance in it; no, not the pace of a foot: but he promised to give it him in possession, and to his seed after him, when as yet he had no child.

6. அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.
ஆதியாகமம் 15:13-14, யாத்திராகமம் 2:22

6. And God said to him: That his seed should sojourn in a strange country, and that they should bring them under bondage, and treat them evil four hundred years.

7. அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
ஆதியாகமம் 15:14, யாத்திராகமம் 3:12

7. And the nation which they shall serve will I judge, said the Lord; and after these things they shall go out, and shall serve me in this place.

8. மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
ஆதியாகமம் 17:10-11, ஆதியாகமம் 21:4

8. And he gave him the covenant of circumcision, and so he begot Isaac, and circumcised him the eighth day; and Isaac begot Jacob; and Jacob the twelve patriarchs.

9. அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
ஆதியாகமம் 37:11, ஆதியாகமம் 37:28, ஆதியாகமம் 39:2-3, ஆதியாகமம் 39:21, ஆதியாகமம் 45:4

9. And the patriarchs, through envy, sold Joseph into Egypt; and God was with him,

10. தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
ஆதியாகமம் 41:40, ஆதியாகமம் 41:43, ஆதியாகமம் 41:46, சங்கீதம் 105:21

10. And delivered him out of all his tribulations: and he gave him favour and wisdom in the sight of Pharao, the king of Egypt; and he appointed him governor over Egypt, and over all his house.

11. பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.
ஆதியாகமம் 41:54-55, ஆதியாகமம் 42:5

11. Now there came a famine upon all Egypt and Chanaan, and great tribulation; and our fathers found no food.

12. அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.
ஆதியாகமம் 42:2

12. But when Jacob had heard that there was corn in Egypt, he sent our fathers first:

13. இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
ஆதியாகமம் 45:1, ஆதியாகமம் 45:3, ஆதியாகமம் 45:16

13. And at the second time, Joseph was known by his brethren, and his kindred was made known to Pharao.

14. பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
ஆதியாகமம் 45:9-11, ஆதியாகமம் 45:18-19, யாத்திராகமம் 1:5, உபாகமம் 10:22

14. And Joseph sending, called thither Jacob, his father, and all his kindred, seventy-five souls.

15. அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,
ஆதியாகமம் 45:5-6, ஆதியாகமம் 49:33, யாத்திராகமம் 1:6

15. So Jacob went down into Egypt; and he died, and our fathers.

16. அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
ஆதியாகமம் 23:16-17, ஆதியாகமம் 33:19, ஆதியாகமம் 49:29-30, ஆதியாகமம் 50:13, யோசுவா 24:32

16. And they were translated into Sichem, and were laid in the sepulchre, that Abraham bought for a sum of money of the sons of Hemor, the son of Sichem.

17. ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,
யாத்திராகமம் 1:7-8

17. And when the time of the promise drew near, which God had promised to Abraham, the people increased, and were multiplied in Egypt,

18. யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
யாத்திராகமம் 1:7-8

18. Till another king arose in Egypt, who knew not Joseph.

19. அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
யாத்திராகமம் 1:9-10, யாத்திராகமம் 1:18, யாத்திராகமம் 1:22

19. This same dealing craftily with our race, afflicted our fathers, that they should expose their children, to the end they might not be kept alive.

20. அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
யாத்திராகமம் 2:2

20. At the same time was Moses born, and he was acceptable to God: who was nourished three months in his father's house.

21. அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
யாத்திராகமம் 2:5, யாத்திராகமம் 2:10

21. And when he was exposed, Pharao's daughter took him up, and nourished him for her own son.

22. மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.

22. And Moses was instructed in all the wisdom of the Egyptians; and he was mighty in his words and in his deeds.

23. அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.
யாத்திராகமம் 2:11

23. And when he was full forty years old, it came into his heart to visit his brethren, the children of Israel.

24. அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.
யாத்திராகமம் 2:12

24. And when he had seen one of them suffer wrong, he defended him; and striking the Egyptian, he avenged him who suffered the injury.

25. தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்து கொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.

25. And he thought that his brethren understood that God by his hand would save them; but they understood it not.

26. மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.

26. And the day following, he shewed himself to them when they were at strife; and would have reconciled them in peace, saying: Men, ye are brethren; why hurt you one another?

27. பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?
யாத்திராகமம் 2:13-14

27. But he that did the injury to his neighbour thrust him away, saying: Who hath appointed thee prince and judge over us?

28. நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.
யாத்திராகமம் 2:13-14

28. What, wilt thou kill me, as thou didst yesterday kill the Egyptian?

29. இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
யாத்திராகமம் 2:15-22, யாத்திராகமம் 18:3-4

29. And Moses fled upon this word, and was a stranger in the land of Madian, where he begot two sons.

30. நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
யாத்திராகமம் 3:1, யாத்திராகமம் 3:2-3

30. And when forty years were expired, there appeared to him in the desert of mount Sina, an angel in a flame of fire in a bush.

31. மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:
யாத்திராகமம் 3:2-3

31. And Moses seeing it, wondered at the sight. And as he drew near to view it, the voice of the Lord came unto him, saying:

32. நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று, அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.

32. I am the God of thy fathers; the God of Abraham, the God of Isaac, and the God of Jacob. And Moses being terrified, durst not behold.

33. பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.
யாத்திராகமம் 3:5

33. And the Lord said to him: Loose the shoes from thy feet, for the place wherein thou standest, is holy ground.

34. எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
யாத்திராகமம் 2:24, யாத்திராகமம் 3:7-10

34. Seeing I have seen the affliction of my people which is in Egypt, and I have heard their groaning, and am come down to deliver them. And now come, and I will send thee into Egypt.

35. உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
யாத்திராகமம் 2:14, யாத்திராகமம் 3:2

35. This Moses, whom they refused, saying: Who hath appointed thee prince and judge? him God sent to be prince and redeemer by the hand of the angel who appeared to him in the bush.

36. இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
யாத்திராகமம் 7:3, யாத்திராகமம் 14:21, எண்ணாகமம் 14:33

36. He brought them out, doing wonders and signs in the land of Egypt, and in the Red Sea, and in the desert forty years.

37. இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.
உபாகமம் 18:15-18

37. This is that Moses who said to the children of Israel: A prophet shall God raise up to you of your own brethren, as myself: him shall you hear.

38. சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.
யாத்திராகமம் 19:1-6, யாத்திராகமம் 20:1-17, யாத்திராகமம் 23:20-21, உபாகமம் 5:4-22, உபாகமம் 9:10-11

38. This is he that was in the church in the wilderness, with the angel who spoke to him on mount Sina, and with our fathers; who received the words of life to give unto us.

39. இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
எண்ணாகமம் 14:3-4, யாத்திராகமம் 19:1-6, யாத்திராகமம் 20:1-17, யாத்திராகமம் 23:20-21

39. Whom our fathers would not obey; but thrust him away, and in their hearts turned back into Egypt,

40. ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
யாத்திராகமம் 32:1, யாத்திராகமம் 32:23

40. Saying to Aaron: Make us gods to go before us. For as for this Moses, who brought us out of the land of Egypt, we know not what is become of him.

41. அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.
யாத்திராகமம் 32:4-6

41. And they made a calf in those days, and offered sacrifices to the idol, and rejoiced in the works of their own hands.

42. அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
எரேமியா 7:18, எரேமியா 8:2, எரேமியா 19:13, ஆமோஸ் 5:25-26

42. And God turned, and gave them up to serve the host of heaven, as it is written in the books of the prophets: Did you offer victims and sacrifices to me for forty years, in the desert, O house of Israel?

43. பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே.
ஆமோஸ் 5:25-26

43. And you took unto you the tabernacle of Moloch, and the star of your god Rempham, figures which you made to adore them. And I will carry you away beyond Babylon.

44. மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.
யாத்திராகமம் 25:1-40, யாத்திராகமம் 25:40, யாத்திராகமம் 27:21, எண்ணாகமம் 1:50

44. The tabernacle of the testimony was with our fathers in the desert, as God ordained for them, speaking to Moses, that he should make it according to the form which he had seen.

45. மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.
ஆதியாகமம் 48:4, ஆதியாகமம் 24:7, உபாகமம் 2:5, உபாகமம் 11:5, யோசுவா 3:14-17, யோசுவா 18:1, யோசுவா 23:9, யோசுவா 24:18, 2 சாமுவேல் 7:2-16, 1 இராஜாக்கள் 8:17-18, 1 நாளாகமம் 17:1-14, 2 நாளாகமம் 6:7-8, சங்கீதம் 132:5

45. Which also our fathers receiving, brought in with Jesus, into the possession of the Gentiles, whom God drove out before the face of our fathers, unto the days of David.

46. இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
ஆதியாகமம் 48:4, ஆதியாகமம் 24:7, உபாகமம் 2:5, உபாகமம் 11:5, யோசுவா 3:14-17, யோசுவா 18:1, யோசுவா 23:9, யோசுவா 24:18, 2 சாமுவேல் 7:2-16, 1 இராஜாக்கள் 8:17-18, 1 நாளாகமம் 17:1-14, 2 நாளாகமம் 6:7-8, சங்கீதம் 132:5

46. Who found grace before God, and desired to find a tabernacle for the God of Jacob.

47. But Solomon built him a house.

48. ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.

48. Yet the most High dwelleth not in houses made by hands, as the prophet saith:

49. வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;
ஏசாயா 66:1-2

49. Heaven is my throne, and the earth my footstool. What house will you build me? saith the Lord; or what is the place of my resting?

50. இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
ஏசாயா 66:1-2

50. Hath not my hand made all these things?

51. வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
யாத்திராகமம் 32:9, யாத்திராகமம் 33:3-5, லேவியராகமம் 26:41, எண்ணாகமம் 27:14, ஏசாயா 63:10, எரேமியா 6:10, எரேமியா 9:26

51. You stiffnecked and uncircumcised in heart and ears, you always resist the Holy Ghost: as your fathers did, so do you also.

52. தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.
2 நாளாகமம் 36:16

52. Which of the prophets have not your fathers persecuted? And they have slain them who foretold of the coming of the Just One; of whom you have been now the betrayers and murderers:

53. தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.

53. Who have received the law by the disposition of angels, and have not kept it.

54. இவைகளை அவர்கள் கேட்டபொழுது. மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
யோபு 16:9, சங்கீதம் 35:16, சங்கீதம் 37:12, சங்கீதம் 112:10

54. Now hearing these things, they were cut to the heart, and they gnashed with their teeth at him.

55. அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:

55. But he, being full of the Holy Ghost, looking up steadfastly to heaven, saw the glory of God, and Jesus standing on the right hand of God. And he said: Behold, I see the heavens opened, and the Son of man standing on the right hand of God.

56. அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

56. And they crying out with a loud voice, stopped their ears, and with one accord ran violently upon him.

57. அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,

57. And casting him forth without the city, they stoned him; and the witnesses laid down their garments at the feet of a young man, whose name was Saul.

58. அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்.

58. And they stoned Stephen, invoking, and saying: Lord Jesus, receive my spirit.

59. அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
சங்கீதம் 31:5

59. And falling on his knees, he cried with a loud voice, saying: Lord, lay not this sin to their charge. And when he had said this, he fell asleep in the Lord. And Saul was consenting to his death.



Shortcut Links
அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
ஆதியாகமம் - Genesis | யாத்திராகமம் - Exodus | லேவியராகமம் - Leviticus | எண்ணாகமம் - Numbers | உபாகமம் - Deuteronomy | யோசுவா - Joshua | நியாயாதிபதிகள் - Judges | ரூத் - Ruth | 1 சாமுவேல் - 1 Samuel | 2 சாமுவேல் - 2 Samuel | 1 இராஜாக்கள் - 1 Kings | 2 இராஜாக்கள் - 2 Kings | 1 நாளாகமம் - 1 Chronicles | 2 நாளாகமம் - 2 Chronicles | எஸ்றா - Ezra | நெகேமியா - Nehemiah | எஸ்தர் - Esther | யோபு - Job | சங்கீதம் - Psalms | நீதிமொழிகள் - Proverbs | பிரசங்கி - Ecclesiastes | உன்னதப்பாட்டு - Song of Songs | ஏசாயா - Isaiah | எரேமியா - Jeremiah | புலம்பல் - Lamentations | எசேக்கியேல் - Ezekiel | தானியேல் - Daniel | ஓசியா - Hosea | யோவேல் - Joel | ஆமோஸ் - Amos | ஒபதியா - Obadiah | யோனா - Jonah | மீகா - Micah | நாகூம் - Nahum | ஆபகூக் - Habakkuk | செப்பனியா - Zephaniah | ஆகாய் - Haggai | சகரியா - Zechariah | மல்கியா - Malachi | மத்தேயு - Matthew | மாற்கு - Mark | லூக்கா - Luke | யோவான் - John | அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts | ரோமர் - Romans | 1 கொரிந்தியர் - 1 Corinthians | 2 கொரிந்தியர் - 2 Corinthians | கலாத்தியர் - Galatians | எபேசியர் - Ephesians | பிலிப்பியர் - Philippians | கொலோசெயர் - Colossians | 1 தெசலோனிக்கேயர் - 1 Thessalonians | 2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians | 1 தீமோத்தேயு - 1 Timothy | 2 தீமோத்தேயு - 2 Timothy | தீத்து - Titus | பிலேமோன் - Philemon | எபிரேயர் - Hebrews | யாக்கோபு - James | 1 பேதுரு - 1 Peter | 2 பேதுரு - 2 Peter | 1 யோவான் - 1 John | 2 யோவான் - 2 John | 3 யோவான் - 3 John | யூதா - Jude | வெளிப்படுத்தின விசேஷம் - Revelation |

Explore Parallel Bibles
21st Century KJV | A Conservative Version | American King James Version (1999) | American Standard Version (1901) | Amplified Bible (1965) | Apostles' Bible Complete (2004) | Bengali Bible | Bible in Basic English (1964) | Bishop's Bible | Complementary English Version (1995) | Coverdale Bible (1535) | Easy to Read Revised Version (2005) | English Jubilee 2000 Bible (2000) | English Lo Parishuddha Grandham | English Standard Version (2001) | Geneva Bible (1599) | Hebrew Names Version | tamil Bible | Holman Christian Standard Bible (2004) | Holy Bible Revised Version (1885) | Kannada Bible | King James Version (1769) | Literal Translation of Holy Bible (2000) | Malayalam Bible | Modern King James Version (1962) | New American Bible | New American Standard Bible (1995) | New Century Version (1991) | New English Translation (2005) | New International Reader's Version (1998) | New International Version (1984) (US) | New International Version (UK) | New King James Version (1982) | New Life Version (1969) | New Living Translation (1996) | New Revised Standard Version (1989) | Restored Name KJV | Revised Standard Version (1952) | Revised Version (1881-1885) | Revised Webster Update (1995) | Rotherhams Emphasized Bible (1902) | Tamil Bible | Telugu Bible (BSI) | Telugu Bible (WBTC) | The Complete Jewish Bible (1998) | The Darby Bible (1890) | The Douay-Rheims American Bible (1899) | The Message Bible (2002) | The New Jerusalem Bible | The Webster Bible (1833) | Third Millennium Bible (1998) | Today's English Version (Good News Bible) (1992) | Today's New International Version (2005) | Tyndale Bible (1534) | Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537) | Updated Bible (2006) | Voice In Wilderness (2006) | World English Bible | Wycliffe Bible (1395) | Young's Literal Translation (1898) | Tamil Bible Commentary |