20. அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதனம் கேட்டுக்கொண்டார்கள்.
1 இராஜாக்கள் 5:11, எசேக்கியேல் 27:17
20. Now Herod was angry with the people of Tyre and Sidon; and they came to him in a body, and having persuaded Blastus, the king's chamberlain, they asked for peace, because their country depended on the king's country for food.