Jeremiah - எரேமியா 40 | View All

1. பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:

1. The word that came to Jeremiah from the LORD after Nebuzaradan the captain of the guard had let him go from Ramah, when he took him bound in chains along with all the captives of Jerusalem and Judah who were being exiled to Babylon.

2. காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.

2. The captain of the guard took Jeremiah and said to him, 'The LORD your God pronounced this evil against this place;

3. தாம் சொன்னபடியே கர்த்தர் வரப்பண்ணியுமிருக்கிறார்; நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது.

3. the LORD has brought it about, and has done as he said. Because you sinned against the LORD, and did not obey his voice, this thing has come upon you.

4. இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

4. Now, behold, I release you today from the chains on your hands. If it seems good to you to come with me to Babylon, come, and I will look after you well; but if it seems wrong to you to come with me to Babylon, do not come. See, the whole land is before you; go wherever you think it good and right to go.

5. அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.

5. If you remain, then return to Gedaliah the son of Ahikam, son of Shaphan, whom the king of Babylon appointed governor of the cities of Judah, and dwell with him among the people; or go wherever you think it right to go.' So the captain of the guard gave him an allowance of food and a present, and let him go.

6. அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.

6. Then Jeremiah went to Gedaliah the son of Ahikam, at Mizpah, and dwelt with him among the people who were left in the land.

7. பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவச் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,

7. When all the captains of the forces in the open country and their men heard that the king of Babylon had appointed Gedaliah the son of Ahikam governor in the land, and had committed to him men, women, and children, those of the poorest of the land who had not been taken into exile to Babylon,

8. அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.

8. they went to Gedaliah at Mizpah -- Ishmael the son of Nethaniah, Johanan the son of Kareah, Seraiah the son of Tanhumeth, the sons of Ephai the Netophathite, Jezaniah the son of the Maacathite, they and their men.

9. அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப்பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.

9. Gedaliah the son of Ahikam, son of Shaphan, swore to them and their men, saying, 'Do not be afraid to serve the Chaldeans. Dwell in the land, and serve the king of Babylon, and it shall be well with you.

10. நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

10. As for me, I will dwell at Mizpah, to stand for you before the Chaldeans who will come to us; but as for you, gather wine and summer fruits and oil, and store them in your vessels, and dwell in your cities that you have taken.'

11. மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,

11. Likewise, when all the Jews who were in Moab and among the Ammonites and in Edom and in other lands heard that the king of Babylon had left a remnant in Judah and had appointed Gedaliah the son of Ahikam, son of Shaphan, as governor over them,

12. எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்து வைத்தார்கள்.

12. then all the Jews returned from all the places to which they had been driven and came to the land of Judah, to Gedaliah at Mizpah; and they gathered wine and summer fruits in great abundance.

13. அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,

13. Now Johanan the son of Kareah and all the leaders of the forces in the open country came to Gedaliah at Mizpah

14. உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்; ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.

14. and said to him, 'Do you know that Baalis the king of the Ammonites has sent Ishmael the son of Nethaniah to take your life?' But Gedaliah the son of Ahikam would not believe them.

15. பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்று போடவேண்டியதென்ன என்றான்.

15. Then Johanan the son of Kareah spoke secretly to Gedaliah at Mizpah, 'Let me go and slay Ishmael the son of Nethaniah, and no one will know it. Why should he take your life, so that all the Jews who are gathered about you would be scattered, and the remnant of Judah would perish?'

16. ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

16. But Gedaliah the son of Ahikam said to Johanan the son of Kareah, 'You shall not do this thing, for you are speaking falsely of Ishmael.'



Shortcut Links
எரேமியா - Jeremiah : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52 |
ஆதியாகமம் - Genesis | யாத்திராகமம் - Exodus | லேவியராகமம் - Leviticus | எண்ணாகமம் - Numbers | உபாகமம் - Deuteronomy | யோசுவா - Joshua | நியாயாதிபதிகள் - Judges | ரூத் - Ruth | 1 சாமுவேல் - 1 Samuel | 2 சாமுவேல் - 2 Samuel | 1 இராஜாக்கள் - 1 Kings | 2 இராஜாக்கள் - 2 Kings | 1 நாளாகமம் - 1 Chronicles | 2 நாளாகமம் - 2 Chronicles | எஸ்றா - Ezra | நெகேமியா - Nehemiah | எஸ்தர் - Esther | யோபு - Job | சங்கீதம் - Psalms | நீதிமொழிகள் - Proverbs | பிரசங்கி - Ecclesiastes | உன்னதப்பாட்டு - Song of Songs | ஏசாயா - Isaiah | எரேமியா - Jeremiah | புலம்பல் - Lamentations | எசேக்கியேல் - Ezekiel | தானியேல் - Daniel | ஓசியா - Hosea | யோவேல் - Joel | ஆமோஸ் - Amos | ஒபதியா - Obadiah | யோனா - Jonah | மீகா - Micah | நாகூம் - Nahum | ஆபகூக் - Habakkuk | செப்பனியா - Zephaniah | ஆகாய் - Haggai | சகரியா - Zechariah | மல்கியா - Malachi | மத்தேயு - Matthew | மாற்கு - Mark | லூக்கா - Luke | யோவான் - John | அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts | ரோமர் - Romans | 1 கொரிந்தியர் - 1 Corinthians | 2 கொரிந்தியர் - 2 Corinthians | கலாத்தியர் - Galatians | எபேசியர் - Ephesians | பிலிப்பியர் - Philippians | கொலோசெயர் - Colossians | 1 தெசலோனிக்கேயர் - 1 Thessalonians | 2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians | 1 தீமோத்தேயு - 1 Timothy | 2 தீமோத்தேயு - 2 Timothy | தீத்து - Titus | பிலேமோன் - Philemon | எபிரேயர் - Hebrews | யாக்கோபு - James | 1 பேதுரு - 1 Peter | 2 பேதுரு - 2 Peter | 1 யோவான் - 1 John | 2 யோவான் - 2 John | 3 யோவான் - 3 John | யூதா - Jude | வெளிப்படுத்தின விசேஷம் - Revelation |

Explore Parallel Bibles
21st Century KJV | A Conservative Version | American King James Version (1999) | American Standard Version (1901) | Amplified Bible (1965) | Apostles' Bible Complete (2004) | Bengali Bible | Bible in Basic English (1964) | Bishop's Bible | Complementary English Version (1995) | Coverdale Bible (1535) | Easy to Read Revised Version (2005) | English Jubilee 2000 Bible (2000) | English Lo Parishuddha Grandham | English Standard Version (2001) | Geneva Bible (1599) | Hebrew Names Version | tamil Bible | Holman Christian Standard Bible (2004) | Holy Bible Revised Version (1885) | Kannada Bible | King James Version (1769) | Literal Translation of Holy Bible (2000) | Malayalam Bible | Modern King James Version (1962) | New American Bible | New American Standard Bible (1995) | New Century Version (1991) | New English Translation (2005) | New International Reader's Version (1998) | New International Version (1984) (US) | New International Version (UK) | New King James Version (1982) | New Life Version (1969) | New Living Translation (1996) | New Revised Standard Version (1989) | Restored Name KJV | Revised Standard Version (1952) | Revised Version (1881-1885) | Revised Webster Update (1995) | Rotherhams Emphasized Bible (1902) | Tamil Bible | Telugu Bible (BSI) | Telugu Bible (WBTC) | The Complete Jewish Bible (1998) | The Darby Bible (1890) | The Douay-Rheims American Bible (1899) | The Message Bible (2002) | The New Jerusalem Bible | The Webster Bible (1833) | Third Millennium Bible (1998) | Today's English Version (Good News Bible) (1992) | Today's New International Version (2005) | Tyndale Bible (1534) | Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537) | Updated Bible (2006) | Voice In Wilderness (2006) | World English Bible | Wycliffe Bible (1395) | Young's Literal Translation (1898) | Tamil Bible Commentary |