15. எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்.
15. Next, God sent the angel to Jerusalem to destroy it, but as he was about to destroy it, Yahweh looked down and felt sorry about the calamity; and he said to the destroying angel, 'Enough now! Hold your hand!' The angel of Yahweh was standing by the threshing-floor of Ornan the Jebusite.