18. அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:
18. Asa then took all the silver and gold remaining in the treasuries of the temple of the LORD and of the royal palace. Entrusting them to his ministers, King Asa sent them to Ben-hadad, son of Tabrimmon, son of Hezion, king of Aram, resident in Damascus. He said: