Nehemiah - நெகேமியா 7 | View All

1. அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,

1. Now when we had builded the wall I hanged on the doors, and the porters, singers and Levites were appointed.

2. நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

2. And I commanded my brother Hanani, and Hananiah the ruler of the palace at Jerusalem: for he was a faithful man, and feared God more than did many other,

3. அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

3. and I said unto them: let not the gates of Jerusalem be opened until the son be whote.(whole known) and while they are yet standing in the watch, the doors shall be shut and barred. And there were certain citizens of Jerusalem appointed to be watchmen every one in his watch, and about his house.

4. பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது; அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.

4. As for the city, it was large of room, and great, but the people were few therein, and the houses were not builded.

5. அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:

5. And my God gave me in my heart, that I gathered together the principal men and the people to number them. And I found a register of the number of them, which came up afore out of the captivity: and found written therein:

6. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,

6. These are the sons of the land that went up from the captivity of the carrying away, (whom Nabuchodonosor the king of Babylon had brought(carried) away) and came again to(dwelt at) Jerusalem and Judah, every one unto his city,

7. எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:

7. which came(and were come) with Zorobabel, Jesua, Nehemiah, Asariah, Raamiah, Nahamani, Mardochee, Belsan, Mesparath, Begvai, Nahum, Baanah. This is the number of the men of the people of Israel.

8. பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.

8. The children of Pharos were two thousand, an hundredth, and two and seventy:

9. செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

9. the children of Saphatiah, three hundredth and two and seventy:

10. ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.

10. The children of Arah, six hundredth and two and fifty.

11. யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.

11. The children of Pahath Moab among the children of Jesua and Joab, two thousand, eight hundredth, and eighteen.

12. ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

12. The children of Elam, a thousand two hundredth and four and fifty.

13. சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.

13. The children of Zethua, eight hundredth and five and forty.

14. சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.

14. The children of Sacai, seven hundredth and threescore:

15. பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

15. The children of Bani, six hundredth and eight and forty.

16. பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.

16. The children of Bebai, six hundredth and eight and twenty.

17. அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.

17. The children of Asgad, two thousand, three hundredth and two and twenty.

18. அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.

18. The children of Adonikam, six hundredth and seven and threescore.

19. பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.

19. The children of Bigoai, two thousand, and seven and threescore.

20. ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.

20. The children of Adin, six hundredth, and five and fifty.

21. எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.

21. The children of Ater of Hezekiah, eight and ninety.

22. ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.

22. The children of Hasum, three hundredth eight and twenty.

23. பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.

23. The children of Bezai, three hundredth and four and twenty.

24. ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.

24. The children of Hariph, an hundredth and twelve.

25. கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.

25. The children of Gabaon, five and ninety.

26. பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.

26. The men of Bethlehem and Netophah, an hundredth and eight and fourscore.

27. ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.

27. The men of Anathoth, an hundredth and eight and twenty.

28. பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.

28. The men of Beth Asmoth, two and forty.

29. கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

29. The men of Kariath Jarim, Cephirah, and Beeroth, seven hundredth and three and forty.

30. ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.

30. The men of Ramah and Gaba, six hundredth and one and twenty.

31. மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.

31. The men of Machmas, an hundredth and two and twenty.

32. பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.

32. The men of Bethel and Ai, an hundredth and three and twenty.

33. வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.

33. The men of Nebo, an hundredth and two and fifty:

34. மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

34. The children of the other Elam, a thousand, two hundredth and four and fifty.

35. ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.

35. The children of Harim, three hundredth and twenty.

36. எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.

36. The children of Jericho: three hundredth and five and forty.

37. லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.

37. The children of Lodhadid and Ono, seven hundredth and one and twenty.

38. செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.

38. The children of Senaah, three thousand, nine hundredth and thirty.

39. ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

39. The priests. The children of Jedaiah of the house of Jeshua, nine hundredth and three and seventy:

40. இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

40. The children of Emer, a thousand, and two and fifty.

41. பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.

41. The children of Phashur, a thousand, two hundredth and seven and forty:

42. ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.

42. The children of Harim, a thousand and seventeen.

43. லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.

43. The Levites. the children of Jeshua of Cadmiel, among the children of Hoduah, four and seventy.

44. பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

44. The singers. the children of Asaph, an hundredth and eight and forty.

45. வாசல் காவலாளரானவர்கள்: சல்லூமின் புத்திரர், அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.

45. The porters: (were) The children of Selum, the children of Ater, the children of Talmon, the children of Akub, the children of Hatita, the children of Sobai, all together an hundredth and eight and thirty.

46. நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,

46. The Nethinims, the children of Ziha, the children of Hasupha, the children of Tabaoth;

47. கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,

47. The children of Ceros, the children of Sia, the children of Phadon;

48. லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,

48. The children of Lebanah, the children of Hagaba, the children of Salmai,

49. ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,

49. the children of Hanan, the children of Gidel, the children of Gaher,

50. ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,

50. the children of Reaia, the children of Razin, the children of Necoda,

51. காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,

51. the children of Gasem, the children of Usa, the children of Phaseah,

52. பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,

52. the children of Besai, the children of Meunim, the children of Nephusasim;

53. பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,

53. The children of Bacbuc, the children of Hacupha, the children of Harhur;

54. பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,

54. The children of Bezlith, the children of Mahida, the children of Harsa;

55. பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,

55. The children of Bercos, the children of Sissera, the children of Thamah;

56. நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,

56. The children of Neziah, the children of Hatipha.

57. சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர்,

57. The children of Solomon's servants: (were) the children of Sotai, the children of Sophereth, the children of Pherida;

58. யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,

58. The children of Jaala, the children of Darcon, the children of Gidel;

59. செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.

59. The children of Saphatiah, the children of Natil, the children of Pochereth of Zabaim, the children of Amon.

60. நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.

60. All the Nethinims, and the children of Solomon's servants, were all together three hundredth and two and ninety.

61. தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:

61. And these went up also, Thel Melah, Tel Harsa, Cherub, Adon, and Emer: but they could not shew their father's house, nor their seed, whether they were of Israel.

62. தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.

62. The children of Dalaiah, the children of Tobiah, the children of Necoda, (were) six hundredth and two and forty.

63. ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரர்.

63. And of the priests (were) the children of Hobaiah, the children of Hacos, the children of Bersilai, which took one of the daughters of Bersilai the Gileadite to wife, and was named after their name.

64. இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

64. These sought the register of their generation, and when they found it not, they were put from the priesthood.

65. ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

65. And Hathirsatha said unto them, that they should not eat of the most holy, till there came up a Priest with light and perfectness.

66. சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

66. The whole congregation as one man, was two and forty thousand, three hundredth and threescore;

67. அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

67. Beside their servants and maidens, of whom there were seven thousand, three hundredth and seven and thirty. And they had two hundredth and seven and forty singing men and women,

68. அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.

68. seven hundredth and six and thirty horses, two hundredth and five and forty Mules,

69. ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

69. four hundredth and five and thirty Camels, and six thousand, seven hundredth and twenty Asses.

70. வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.

70. And certain of the ancient fathers gave unto the work. Nathirsatha gave to the treasure a thousand drames,(guldens) fifty basens, five hundredth and thirty priests' garments.

71. வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.

71. And some of the chief fathers gave unto the treasure of the work, twenty thousand and two hundredth pound of silver.

72. மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.

72. And the other people gave twenty thousand drams,(guldens) and two thousand pound of silver, and seven and three score priests' garments.

73. ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

73. And the priests and Levites, the Porters, the singers, and the other of the people, and the Nethinims, and all Israel, dwelt in their cities.



Shortcut Links
நெகேமியா - Nehemiah : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
ஆதியாகமம் - Genesis | யாத்திராகமம் - Exodus | லேவியராகமம் - Leviticus | எண்ணாகமம் - Numbers | உபாகமம் - Deuteronomy | யோசுவா - Joshua | நியாயாதிபதிகள் - Judges | ரூத் - Ruth | 1 சாமுவேல் - 1 Samuel | 2 சாமுவேல் - 2 Samuel | 1 இராஜாக்கள் - 1 Kings | 2 இராஜாக்கள் - 2 Kings | 1 நாளாகமம் - 1 Chronicles | 2 நாளாகமம் - 2 Chronicles | எஸ்றா - Ezra | நெகேமியா - Nehemiah | எஸ்தர் - Esther | யோபு - Job | சங்கீதம் - Psalms | நீதிமொழிகள் - Proverbs | பிரசங்கி - Ecclesiastes | உன்னதப்பாட்டு - Song of Songs | ஏசாயா - Isaiah | எரேமியா - Jeremiah | புலம்பல் - Lamentations | எசேக்கியேல் - Ezekiel | தானியேல் - Daniel | ஓசியா - Hosea | யோவேல் - Joel | ஆமோஸ் - Amos | ஒபதியா - Obadiah | யோனா - Jonah | மீகா - Micah | நாகூம் - Nahum | ஆபகூக் - Habakkuk | செப்பனியா - Zephaniah | ஆகாய் - Haggai | சகரியா - Zechariah | மல்கியா - Malachi | மத்தேயு - Matthew | மாற்கு - Mark | லூக்கா - Luke | யோவான் - John | அப்போஸ்தலருடைய நடபடிகள் - Acts | ரோமர் - Romans | 1 கொரிந்தியர் - 1 Corinthians | 2 கொரிந்தியர் - 2 Corinthians | கலாத்தியர் - Galatians | எபேசியர் - Ephesians | பிலிப்பியர் - Philippians | கொலோசெயர் - Colossians | 1 தெசலோனிக்கேயர் - 1 Thessalonians | 2 தெசலோனிக்கேயர் - 2 Thessalonians | 1 தீமோத்தேயு - 1 Timothy | 2 தீமோத்தேயு - 2 Timothy | தீத்து - Titus | பிலேமோன் - Philemon | எபிரேயர் - Hebrews | யாக்கோபு - James | 1 பேதுரு - 1 Peter | 2 பேதுரு - 2 Peter | 1 யோவான் - 1 John | 2 யோவான் - 2 John | 3 யோவான் - 3 John | யூதா - Jude | வெளிப்படுத்தின விசேஷம் - Revelation |

Explore Parallel Bibles
21st Century KJV | A Conservative Version | American King James Version (1999) | American Standard Version (1901) | Amplified Bible (1965) | Apostles' Bible Complete (2004) | Bengali Bible | Bible in Basic English (1964) | Bishop's Bible | Complementary English Version (1995) | Coverdale Bible (1535) | Easy to Read Revised Version (2005) | English Jubilee 2000 Bible (2000) | English Lo Parishuddha Grandham | English Standard Version (2001) | Geneva Bible (1599) | Hebrew Names Version | tamil Bible | Holman Christian Standard Bible (2004) | Holy Bible Revised Version (1885) | Kannada Bible | King James Version (1769) | Literal Translation of Holy Bible (2000) | Malayalam Bible | Modern King James Version (1962) | New American Bible | New American Standard Bible (1995) | New Century Version (1991) | New English Translation (2005) | New International Reader's Version (1998) | New International Version (1984) (US) | New International Version (UK) | New King James Version (1982) | New Life Version (1969) | New Living Translation (1996) | New Revised Standard Version (1989) | Restored Name KJV | Revised Standard Version (1952) | Revised Version (1881-1885) | Revised Webster Update (1995) | Rotherhams Emphasized Bible (1902) | Tamil Bible | Telugu Bible (BSI) | Telugu Bible (WBTC) | The Complete Jewish Bible (1998) | The Darby Bible (1890) | The Douay-Rheims American Bible (1899) | The Message Bible (2002) | The New Jerusalem Bible | The Webster Bible (1833) | Third Millennium Bible (1998) | Today's English Version (Good News Bible) (1992) | Today's New International Version (2005) | Tyndale Bible (1534) | Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537) | Updated Bible (2006) | Voice In Wilderness (2006) | World English Bible | Wycliffe Bible (1395) | Young's Literal Translation (1898) | Tamil Bible Commentary |