Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
1. A time came after the death of Joshua when the People of Israel asked GOD, 'Who will take the lead in going up against the Canaanites to fight them?'
2. அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
2. And GOD said, 'Judah will go. I've given the land to him.'
3. அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான்.
3. The men of Judah said to those of their brother Simeon, 'Go up with us to our territory and we'll fight the Canaanites. Then we'll go with you to your territory.' And Simeon went with them.
4. யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும், பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.
4. So Judah went up. GOD gave them the Canaanites and the Perizzites. They defeated them at Bezek--ten military units!
5. பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும், பெரிசியரையும் வெட்டினார்கள்.
5. They caught up with My-Master-Bezek there and fought him. They smashed the Canaanites and the Perizzites.
6. அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கை கால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள்.
6. My-Master-Bezek ran, but they gave chase and caught him. They cut off his thumbs and big toes.
7. அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.
7. My-Master-Bezek said, 'Seventy kings with their thumbs and big toes cut off used to crawl under my table, scavenging. Now God has done to me what I did to them.' They brought him to Jerusalem and he died there.
8. யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.
8. The people of Judah attacked and captured Jerusalem, subduing the city by sword and then sending it up in flames.
9. பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.
9. After that they had gone down to fight the Canaanites who were living in the hill country, the Negev, and the foothills.
10. அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத்அர்பா என்று பேர்.
10. Judah had gone on to the Canaanites who lived in Hebron (Hebron used to be called Kiriath Arba) and brought Sheshai, Ahiman, and Talmai to their knees.
11. அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.
11. From there they had marched against the population of Debir (Debir used to be called Kiriath Sepher).
12. அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக் கொடுப்பேன் என்றான்.
12. Caleb had said, 'Whoever attacks Kiriath Sepher and takes it, I'll give my daughter Acsah to him as his wife.'
13. அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.
13. Othniel son of Kenaz, Caleb's brother, took it, so Caleb gave him his daughter Acsah as his wife.
14. அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
14. When she arrived she got him to ask for farm land from her father. As she dismounted from her donkey Caleb asked her, 'What would you like?'
15. அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
15. She said, 'Give me a marriage gift. You've given me desert land; Now give me pools of water!' And he gave her the upper and the lower pools.
16. மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சம்மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.
16. The people of Hobab the Kenite, Moses' relative, went up with the people of Judah from the City of Palms to the wilderness of Judah at the descent of Arad. They settled down there with the Amalekites.
17. யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.
17. The people of Judah went with their kin the Simeonites and struck the Canaanites who lived in Zephath. They carried out the holy curse and named the city Curse-town.
18. யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
18. But Judah didn't manage to capture Gaza, Ashkelon, and Ekron with their territories.
19. கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.
19. GOD was certainly with Judah in that they took over the hill country. But they couldn't oust the people on the plain because they had iron chariots.
20. மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.
20. They gave Hebron to Caleb, as Moses had directed. Caleb drove out the three sons of Anak.
21. பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
21. But the people of Benjamin couldn't get rid of the Jebusites living in Jerusalem. Benjaminites and Jebusites live side by side in Jerusalem to this day.
22. யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.
22. The house of Joseph went up to attack Bethel. GOD was with them.
23. யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர்.
23. Joseph sent out spies to look the place over. Bethel used to be known as Luz.
24. அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
24. The spies saw a man leaving the city and said to him, 'Show us a way into the city and we'll treat you well.'
25. அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
25. The man showed them a way in. They killed everyone in the city but the man and his family.
26. அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்.
26. The man went to Hittite country and built a city. He named it Luz; that's its name to this day.
27. மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.
27. But Manasseh never managed to drive out Beth Shan, Taanach, Dor, Ibleam, and Megiddo with their territories. The Canaanites dug in their heels and wouldn't budge.
28. இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.
28. When Israel became stronger they put the Canaanites to forced labor, but they never got rid of them.
29. எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.
29. Neither did Ephraim drive out the Canaanites who lived in Gezer. The Canaanites stuck it out and lived there with them.
30. செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
30. Nor did Zebulun drive out the Canaanites in Kitron or Nahalol. They kept living there, but they were put to forced labor.
31. ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.
31. Nor did Asher drive out the people of Acco, Sidon, Ahlab, Aczib, Helbah, Aphek, and Rehob.
32. ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
32. Asher went ahead and settled down with the Canaanites since they could not get rid of them.
33. நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
33. Naphtali fared no better. They couldn't drive out the people of Beth Shemesh or Beth Anath so they just moved in and lived with them. They did, though, put them to forced labor.
34. எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.
34. The Amorites pushed the people of Dan up into the hills and wouldn't let them down on the plains.
35. எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கைபலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
35. The Amorites stubbornly continued to live in Mount Heres, Aijalon, and Shaalbim. But when the house of Joseph got the upper hand, they were put to forced labor.
36. எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.
36. The Amorite border extended from Scorpions' Pass and Sela upward.