1. கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
1. THUS SAYS the Lord to His anointed, to Cyrus, whose right hand I have held to subdue nations before him, and I will unarm and ungird the loins of kings to open doors before him, so that gates will not be shut.
3. உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
கொலோசெயர் 2:3
3. And I will give you the treasures of darkness and hidden riches of secret places, that you may know that it is I, the Lord, the God of Israel, Who calls you by your name.
4. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.
4. For the sake of Jacob My servant, and of Israel My chosen, I have called you by your name. I have surnamed you, though you have not known Me.
6. என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
6. That men may know from the east and the rising of the sun and from the west and the setting of the sun that there is no God besides Me. I am the Lord, and no one else [is He].
7. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
7. I form the light and create darkness, I make peace [national well-being] and I create [physical] evil (calamity); I am the Lord, Who does all these things.
8. வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.
8. Let fall in showers, you heavens, from above, and let the skies rain down righteousness [the pure, spiritual, heaven-born possibilities that have their foundation in the holy being of God]; let the earth open, and let them [skies and earth] sprout forth salvation, and let righteousness germinate and spring up [as plants do] together; I the Lord have created it.
9. மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?
ரோமர் 9:20-21
9. Woe to him who strives with his Maker!--a worthless piece of broken pottery among other pieces equally worthless [and yet presuming to strive with his Maker]! Shall the clay say to him who fashions it, What do you think you are making? or, Your work has no handles? [Rom. 9:20.]
11. இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.
11. Thus says the Lord, the Holy One of Israel, and its Maker: Would you question Me about things to come concerning My children, and concerning the work of My hands [would you] command Me?
12. நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
12. I made the earth and created man upon it. I, with My hands, stretched out the heavens, and I commanded all their host.
13. நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
13. I will raise [Cyrus] up in righteousness [willing in every way that which is right and proper], and I will direct all his ways; he will build My city, and he will let My captives go, not for hire or for a bribe, says the Lord of hosts.
14. எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1 கொரிந்தியர் 14:25, வெளிப்படுத்தின விசேஷம் 3:9
14. Thus says the Lord: The labor and wealth of Egypt and the merchandise of Ethiopia and the Sabeans, men of stature, shall come over to you and they shall be yours; they shall follow you; in chains [of subjection to you] they shall come over, and they shall fall down before you; they shall make supplication to you, saying, Surely God is with you, and there is no other, no God besides Him. [I Cor. 14:25.]
16. விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்.
16. They shall be put to shame, yes, confounded, all of them; they who are makers of idols shall go off into confusion together.
18. வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வெறொருவர் இல்லை.
18. For thus says the Lord--Who created the heavens, God Himself, Who formed the earth and made it, Who established it and did not create it to be a worthless waste; He formed it to be inhabited--I am the Lord, and there is no one else.
19. நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
19. I have not spoken in secret, in a corner of the land of darkness; I did not call the descendants of Jacob [to a fruitless service], saying, Seek Me for nothing [but I promised them a just reward]. I, the Lord, speak righteousness (the truth--trustworthy, straightforward correspondence between deeds and words); I declare things that are right. [John 18:20.]
20. ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்.
20. Assemble yourselves and come; draw near together, you survivors of the nations! They have no knowledge who carry about [in religious processions or into battle] their wooden idols and keep on praying to a god that cannot save.
21. நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
மாற்கு 12:32, அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:18
21. Declare and bring forward your strong arguments [for praying to gods that cannot save]; yes, take counsel together. Who announced this [the rise of Cyrus and his conquests] beforehand (long ago)? [What god] declared it of old? Was it not I, the Lord? And there is no other God besides Me, a rigidly and uncompromisingly just and righteous God and Savior; there is none besides Me.
22. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
22. Look to Me and be saved, all the ends of the earth! For I am God, and there is no other.
23. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.
ரோமர் 14:11, பிலிப்பியர் 2:10-11
23. I have sworn by Myself, the word is gone out of My mouth in righteousness and shall not return, that unto Me every knee shall bow, every tongue shall swear [allegiance]. [Rom. 14:11; Phil. 2:10, 11; Heb. 6:13.]
24. கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.
24. Only in the Lord shall one say, I have righteousness (salvation and victory) and strength [to achieve]. To Him shall all come who were incensed against Him, and they shall be ashamed. [I Cor. 1:30, 31.]