Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும்.வெளிப்படுத்தின விசேஷம் 1:7
1. The special word about Egypt: See, the Lord is traveling on a fast cloud and is coming to Egypt. The false gods of Egypt shake in fear before Him. The hearts of the Egyptians become weak.
2. சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும், ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.மத்தேயு 24:7, மாற்கு 13:8, லூக்கா 21:10
2. 'I will make Egyptians go against Egyptians. Each of them will fight against his brother, and each against his neighbor. City will fight against city, and nation against nation.
3. அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப்பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.
3. Then the spirit of the Egyptians will become weak within them. And I will bring their plans to nothing. They will go to false gods and spirits of the dead for help, and to those who speak with spirits of the dead and use their secret ways.
4. நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
4. Then I will give the Egyptians into the hand of a bad ruler. An angry king will rule over them,' says the Lord God of All.
5. அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.
5. The waters of the sea will dry up. The river will become dry.
6. ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கொறுக்கையும் நாணலும் வாடும்.
6. Manmade rivers will smell bad. The small rivers of Egypt will dry up. And the plants by the rivers will waste away.
7. நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோகும்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோகும்.
7. The grass by the side of the Nile and all that is planted by the Nile will become dry, will be driven away, and be no more.
8. மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற யாவரும் துக்கிப்பார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்.
8. The fishermen will cry in sorrow. All those who fish for a living in the Nile River will be filled with sorrow. And those who put out nets on its waters will become weak.
9. மெல்லிய சணலைப் பக்குவப்படுத்துகிறவர்களும், சல்லாக்களை நெய்கிறவர்களும் நாணுவார்கள்.
9. Those who make linen and white cloth will be very troubled.
10. மீன் வளர்க்கிற குளங்களைக் கூலிக்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோகும்.
10. The pillars of Egypt will be crushed. All the able workmen will be filled with sorrow.
11. சோவான் பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?
11. The king's sons of Zoan are very foolish. The words of Pharaoh's wisest men are foolish words. How can you men say to Pharaoh, 'I am a son of the wise, a son of early kings'?
12. அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப்பண்ணின யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும்.1 கொரிந்தியர் 1:20
12. Where then are your wise men? Let them tell you. And let them understand what the Lord of All has planned against Egypt.
13. சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள்.
13. The king's sons of Zoan have become fools. The king's sons of Memphis have been fooled. The heads of her family groups have led Egypt from the right way.
14. கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்; ஆனதுகொண்டு வெறியன் வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச்செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறார்கள்.
14. The Lord has mixed a troubled spirit within her. They have led Egypt the wrong way in all that it does, as a drunk man walks from side to side in what he has spit up.
15. எகிப்தில் தலையாகிலும் வாலாகிலும் கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது.
15. And there will be no work in Egypt and nothing can be done by anyone, its head or tail, its palm branch or river-grass.
16. அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவினாலே அஞ்சி நடுங்குவார்கள்.
16. In that day the Egyptians will be like women. They will shake with fear because of the hand which the Lord of All is going to wave over them.
17. சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான்.
17. The land of Judah will fill Egypt with fear. Whoever hears its name will be afraid of it, because of the plan which the Lord of All is making against them.
18. அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும்.
18. In that day five cities in the land of Egypt will be speaking the language of Canaan and promising to follow the Lord of All. One will be called the City of Destruction.
19. அக்காலத்திலே எகிப்து தேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்டாயிருக்கும்.
19. In that day there will be an altar to the Lord in the center of the land of Egypt, and an altar to the Lord by the side of its land.
20. அது எகிப்துதேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.
20. It will be something special to see, to make the Lord of All known in the land of Egypt. For they will cry to the Lord because of those who make it hard for them. And He will send a Powerful One to save them, and He will take them out of trouble.
21. அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப் பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள்.
21. The Lord will make Himself known to Egypt, and in that day the Egyptians will know the Lord. They will even worship with gifts on the altar. They will make promises to the Lord and keep them.
22. கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.
22. And the Lord will punish Egypt, but then He will heal them. So they will return to the Lord, and He will answer their prayers and heal them.
23. அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிறபெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள்.
23. In that day there will be a road from Egypt to Assyria. The Assyrians will go to Egypt, and the Egyptians will go to Assyria. The Egyptians will worship with the Assyrians.
24. அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.
24. In that day Israel will be the third country with Egypt and Assyria, a good and respected nation on the earth,
25. அவர்களைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
25. to whom the Lord of All has brought good, saying, 'Good will come to Egypt My people, and Assyria the work of My hands, and Israel My chosen people.'