Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
1. Be not thou enuious to folow wicked men, and desire not to be among them:
2. அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.
2. For their heart imagineth to do hurt, and their lippes talke mischiefe.
3. வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
3. Thorowe wysdome is an house buylded, & with vnderstanding is it set vp.
4. அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
4. Thorowe discretion shall the chaumbers be filled with all costly and pleasaunt riches.
5. ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
5. A wise man is [euer] strong: yea a man of vnderstanding increaseth strength.
6. நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
6. For with discretion must warres be taken in hand: and where as are many that can geue counsaile, there is health.
7. மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.
7. Wysdome is to hye a thyng for a foole: for he dare not open his mouth in the gate.
8. தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.
8. He that imagineth mischiefe, maye well be called an vngratious person.
9. தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.
9. The wicked thought of the foolishe is sinne: and the scornefull is an abhomination vnto men.
10. ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.
10. If thou be faynt in the day of aduersitie, thy strength is small.
11. மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
11. Deliuer them that are drawen vnto death, and ceasse not to preserue them that are led to be slayne:
12. அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?மத்தேயு 16:27, ரோமர் 2:6, 2 தீமோத்தேயு 4:14, 1 பேதுரு 1:17, வெளிப்படுத்தின விசேஷம் 2:23, வெளிப்படுத்தின விசேஷம் 20:12-13, வெளிப்படுத்தின விசேஷம் 22:12
12. If thou wylt say, beholde I knewe not of it: doth not he that pondereth the heart consider it? And he that kepeth thy soule, knoweth he it not? Shall not he also recompence euery man according to his workes?
13. என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.
13. My sonne, eate thou hony because it is good, and the hony combe, for it is sweete vnto thy mouth:
14. அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.
14. So [sweete] shal the knowledge of wysdome be vnto thy soule when thou hast found it: and there shalbe hope, and thy hope shall not be cut of.
15. துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
15. Laye no priuie wayte (O wicked man) against the house of the righteous, and spoyle not his resting place.
16. நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
16. For a iust man falleth seuen tymes, and ryseth vp agayne: but the vngodly fall into mischiefe.
17. உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
17. Reioyce not thou at the fall of thyne enemie, and let not thyne heart be glad when he stumbleth:
18. கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
18. Lest the Lorde when he seeth it be angry, and turne his wrath from hym [vnto thee.]
19. பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
19. Fret not thy selfe because of the malitious, neither be enuious at the wicked:
20. துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கருடைய விளக்கு அணைந்துபோகும்.
20. For the wicked shall haue no posteritie, and the candle of the vngodly shalbe put out.
21. என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே.1 பேதுரு 2:17
21. My sonne, feare thou the Lorde and the kyng, and kepe no company with them that slide backe [from his feare:]
22. சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?
22. For their destruction shall rise sodainlye: and who knoweth the aduersitie that may come from them both?
23. பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
23. It is not good to haue respect of any person in iudgement.
24. துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.
24. He that saith to the vngodly thou art righteous, hym shall the people curse, yea the comminaltie shall abhorre him:
25. அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
25. But they that rebuke [the vngodly] in them doth God delight, and a rych blessing shall come vpon them.
26. செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.
26. Euery man shall kisse his lippes that geueth a good aunswere.
27. வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.
27. Make redie thy worke that is without, and looke well vnto that whiche thou hast in the fielde: and then buylde thyne house.
28. நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
28. Be not a false witnesse against thy neighbour, and speake no falsehood with thy lippes.
29. அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
29. Say not, I wyll handle hym euen as he hath dealt with me: and wyll rewarde euery man according to his deedes.
30. சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
30. I went by the fielde of the slouthfull, and by the vineyarde of the foolishe man:
31. இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.
31. And lo, it was all couered with nettles, and stoode full of thornes, and the stone wall was broken downe.
32. அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
32. This I sawe, and considered it well: I looked vpon it, and toke it for a warning.
33. இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
33. Yea sleepe on styll [I say] a litle, slumber a litle, folde thy handes together yet a litle:
34. உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
34. So shall pouertie come vnto thee as one that trauayleth by the way, and necessitie lyke a weaponed man.