Turn Off
21st Century KJV
A Conservative Version
American King James Version (1999)
American Standard Version (1901)
Amplified Bible (1965)
Apostles' Bible Complete (2004)
Bengali Bible
Bible in Basic English (1964)
Bishop's Bible
Complementary English Version (1995)
Coverdale Bible (1535)
Easy to Read Revised Version (2005)
English Jubilee 2000 Bible (2000)
English Lo Parishuddha Grandham
English Standard Version (2001)
Geneva Bible (1599)
Hebrew Names Version
Hindi Bible
Holman Christian Standard Bible (2004)
Holy Bible Revised Version (1885)
Kannada Bible
King James Version (1769)
Literal Translation of Holy Bible (2000)
Malayalam Bible
Modern King James Version (1962)
New American Bible
New American Standard Bible (1995)
New Century Version (1991)
New English Translation (2005)
New International Reader's Version (1998)
New International Version (1984) (US)
New International Version (UK)
New King James Version (1982)
New Life Version (1969)
New Living Translation (1996)
New Revised Standard Version (1989)
Restored Name KJV
Revised Standard Version (1952)
Revised Version (1881-1885)
Revised Webster Update (1995)
Rotherhams Emphasized Bible (1902)
Tamil Bible
Telugu Bible (BSI)
Telugu Bible (WBTC)
The Complete Jewish Bible (1998)
The Darby Bible (1890)
The Douay-Rheims American Bible (1899)
The Message Bible (2002)
The New Jerusalem Bible
The Webster Bible (1833)
Third Millennium Bible (1998)
Today's English Version (Good News Bible) (1992)
Today's New International Version (2005)
Tyndale Bible (1534)
Tyndale-Rogers-Coverdale-Cranmer Bible (1537)
Updated Bible (2006)
Voice In Wilderness (2006)
World English Bible
Wycliffe Bible (1395)
Young's Literal Translation (1898)
Cross Reference Bible
1. மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.எபிரேயர் 9:2
1. 'You are to construct the tabernacle itself with 10 curtains. You must make them of finely spun linen, and blue, purple, and scarlet yarn, with a design of cherubim worked into them.
2. ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
2. The length of each curtain should be 42 feet, and the width of each curtain six feet; all the curtains are to have the same measurements.
3. ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
3. Five of the curtains should be joined together, and the [other] five curtains joined together.
4. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடைஓரத்திலும் அப்படியே செய்வாயாக.
4. Make loops of blue yarn on the edge of the last curtain in the [first] set, and do the same on the edge of the outermost curtain in the second set.
5. காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
5. Make 50 loops on the one curtain and make 50 loops on the edge of the curtain in the second set, so that the loops line up together.
6. ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.
6. Also make 50 gold clasps and join the curtains together with the clasps, so that the tabernacle may be a single unit.
7. வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.
7. 'You are to make curtains of goat hair for a tent over the tabernacle; make 11 of these curtains.
8. ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும், நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
8. The length of each curtain should be 45 feet and the width of each curtain six feet. All 11 curtains are to have the same measurements.
9. ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக.
9. Join five of the curtains by themselves, and the [other] six curtains by themselves. Then fold the sixth curtain double at the front of the tent.
10. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
10. Make 50 loops on the edge of the one curtain, the outermost in the [first] set, and make 50 loops on the edge of the [corresponding] curtain of the second set.
11. ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடுவாயாக.
11. Make 50 bronze clasps; put the clasps through the loops and join the tent together so that it is a single unit.
12. கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதிமூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
12. As for the flap that is left over from the tent curtains, the leftover half curtain is to hang down over the back of the tabernacle.
13. கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
13. The half yard on one side and the half yard on the other of what is left over along the length of the tent curtains should be hanging down over the sides of the tabernacle on either side to cover it.
14. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.
14. Make a covering for the tent from ram skins dyed red, and a covering of manatee skins on top of that.
15. வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
15. 'You are to make upright planks of acacia wood for the tabernacle.
16. ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.
16. The length of each plank is to be 15 feet, and the width of each plank 27 inches.
17. ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
17. Each plank must be connected together with two tenons. Do the same for all the planks of the tabernacle.
18. வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
18. Make the planks for the tabernacle as follows: 20 planks for the south side,
19. அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
19. and make 40 silver bases under the 20 planks, two bases under the first plank for its two tenons, and two bases under the next plank for its two tenons;
20. வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
20. 20 planks for the second side of the tabernacle, the north side,
21. அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
21. along with their 40 silver bases, two bases under the first plank and two bases under each plank;
22. வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
22. and make six planks for the west side of the tabernacle.
23. வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
23. Make two additional planks for the two back corners of the tabernacle.
24. அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்.
24. They are to be paired at the bottom, and joined together at the top in a single ring. So it should be for both of them; they will serve as the two corners.
25. அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
25. There are to be eight planks with their silver bases: 16 bases; two bases under the first plank and two bases under each plank.
26. சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
26. 'You are to make five crossbars of acacia wood for the planks on one side of the tabernacle,
27. வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.
27. five crossbars for the planks on the other side of the tabernacle, and five crossbars for the planks of the back side of the tabernacle on the west.
28. நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
28. The central crossbar is to run through the middle of the planks from one end to the other.
29. பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய்.
29. Then overlay the planks with gold, and make their rings of gold as the holders for the crossbars. Also overlay the crossbars with gold.
30. இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.
30. You are to set up the tabernacle according to the plan for it that you have been shown on the mountain.
31. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.லூக்கா 23:45, எபிரேயர் 9:3, மத்தேயு 27:51
31. 'You are to make a veil of blue, purple, and scarlet yarn, and finely spun linen with a design of cherubim worked into it.
32. சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
32. Hang it on four gold-plated posts of acacia wood that have gold hooks [and that stand] on four silver bases.
33. கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
33. Hang the veil under the clasps and bring the ark of the testimony there behind the veil, so the veil will make a separation for you between the holy place and the most holy place.
34. மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;
34. Put the mercy seat on the ark of the testimony in the most holy place.
35. திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.
35. Place the table outside the veil and the lampstand on the south side of the tabernacle, opposite the table; put the table on the north side.
36. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
36. 'For the entrance to the tent you are to make a screen embroidered with blue, purple, and scarlet yarn, and finely spun linen.
37. அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.
37. Make five posts of acacia wood for the screen and overlay them with gold; their hooks are to be gold, and you are to cast five bronze bases for them.